தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகவுக்கு ரூ.5,300 கோடி சிறப்பு நிதி..!! - Seithipunal
Seithipunal


மத்திய பாஜக அரசின் 2023-2024ம் ஆண்டிற்கான கடைசி முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று காலை முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த பட்ஜெட்டை அனைத்து தரப்பட்ட மக்களும் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர்.

அதன்படி தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான கடன் வழங்குவதற்கான இலக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆன்லைன் பண பரிமாற்றத்திற்கான உற்சவரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோன்று பாஜக ஆட்சி செய்யும் கர்நாடகாவில் வறட்சி பாதிப்பு காரணமாக சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடக மாநிலத்திற்கு ரூ.5,300 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக ஒதுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளதால் சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Special fund of Rs5300 crore for Karnataka govt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->