19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி | புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தொடங்கும் கூட்டத்தொடர்! - Seithipunal
Seithipunal


சில மாதங்களுக்கு முன்பு இந்திய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. கடந்த ஜூலை 20ஆம் தேதி மழைக்கால கூட்ட தொடர் தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற்றது. 

இந்த கூட்டத்தொடரானது புதியதாக கட்டப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் தான் நடைபெற்றது. 

தற்போது இந்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வருகின்ற 18ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறும் என தெரிவித்துள்ளார். 

ஆனால் எதற்காக இந்த கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறித்து மத்திய அரசு தகவல் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள சிறப்பு கூட்டம் எங்கு நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதற்கு 18 ஆம் தேதி வரை வழக்கம் போல் பழைய கட்டிடத்தில் கூட்டம் தொடங்கும். 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் மாற்றப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

விநாயகர் சதுர்த்தி விழாவானது 18 ஆம் தேதி மதியம் 12.39 மணி முதல் 19ஆம் தேதி இரவு 8.43 மணி வரை கொண்டாடப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

special Session begin New Parliament Building 


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->