பெங்களூரு-சென்னை இடையே சதாப்தி ரெயில்களின் வேகம் 130 கிலோ மீட்டர் நேரத்திற்கு அதிகரிப்பு! - Seithipunal
Seithipunal


கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூரு மற்றும் தமிழகத்தின் தலைநகர் சென்னை இடையே 30-க்கும் மேற்பட்ட ரெயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. இதில் முக்கியமானவை மைசூரு-பெங்களூரு வந்தேபாரத் ரெயில் மற்றும் சதாப்தி ரெயில்கள் ஆகும்.

தற்போது, பெங்களூரு-சென்னை இடையே இயக்கப்படும் சதாப்தி ரெயில்களின் வேகத்தை 130 கிலோ மீட்டர்/மணி என உயர்த்துவதற்கான முடிவை தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான சோதனை ஓட்டம் கடந்த செவ்வாய் கிழமை வெற்றிகரமாக நடைபெற்றது.

சோதனை ஓட்டம் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் காலை 8:05 மணிக்கு தொடங்கி, ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை 9:28 மணிக்கு சென்றடைந்தது. பின்னர், ஜோலார்பேட்டை இருந்து பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு மாலை 4:30 மணிக்கு திரும்பிய ரெயில் பயணம் வெற்றிகரமாக முடிந்தது.

இப்போது, வந்தேபாரத் ரெயில் பெங்களூரு-சென்னை இடையே 4 மணி 20 நிமிடங்கள் பயண நேரம் எடுக்கும், அத்துடன் சதாப்தி ரெயில் பயண நேரம் 4 மணி 40 நிமிடங்கள் ஆகும். ஆனால், 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுவதன் மூலம், இந்த ரெயில்களின் பயண நேரம் சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் இந்த ரெயில்களின் வேகம் மேலும் அதிகரித்து இயக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Speed ​​of Shatabdi trains between Bengaluru Chennai increased to 130 kmph


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->