நடுக்கடலில் இலங்கை மீனவர்கள் அதிரடி கைது!... இந்திய கடலோர காவல்படை நடவடிக்கை! - Seithipunal
Seithipunal



ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடற்கரையில்  சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு இலங்கை பைபர் படகு மற்றும் அதில் இருந்த மூன்று இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் விரட்டிப் பிடித்து கைது செய்து மண்டபம் முகாமிற்கு அவர்களை அழைத்து சென்றனர்.

மேலும் இலங்கை  மீனவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில், காற்றின் வேகம் காரணமாக திசை மாறி இந்திய கடல் பரப்புக்குள் வந்ததாக தெரிவித்துள்ளனர்.

இருந்த போதிலும், இந்திய கடலோர காவல் படை மண்டபம் முகாமில் வைத்து மீனவர்களிடம் முழுமையான விசாரணை நடத்திய போது, முன்னுக்குப் பின் முரணாக தகவல் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மண்டப்பத்திலுள்ள இந்திய கடலோர காவல் படை முகாமில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள இந்திய ஜாவா படை, விசாரணை முடிவில்தான், மீனவர்கள் சட்ட விரோத நடவடிக்கை எதிலும் ஈடுபடுவதற்காக இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்தார்களா அல்லது எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டார்களா அல்லது காற்றின் திசையில் அறியாமல் வந்தனரா என்பது தெரியவரும் என இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Lankan fishermen arrested in the middle of the sea Indian Coast Guard action


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->