முன்னாள் பிரதமர் நேருவை அவதூறாக பேசிய ஸ்டாண்ட் அப் காமெடியன்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


முன்னாள் பிரதமர் நேரு குறித்து அவதூறாக பேசி இளைஞர் ஒருவர் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். ஸ்டாண்ட் அப் காமெடி என்ற பெயரில்  நேருவை அவதூறாக பேசியுள்ளார்.

பரத் பாலாஜி என்ற நபர் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவில், ஜவகர்லால் நேருவையும், மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவியை தொடர்புபடுத்தி பேசியதோடு, காந்தி Father of the nation என்றும் நேரு daddy of the nation என்றும் அவதூறாக பேசியுள்ளார்.

மேலும் பல இடங்களில் நேருவை குறிப்பிட்டு ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளதாகவும் தெரியவருகிறது. இதை கேட்டு பார்வையாளர்கள் எதிர்வினையாற்றாமல் சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்துள்ளனர்.

குறித்த வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் பாலாஜியின் தரக்குறைவான பேச்சுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. 

ஸ்டாண்ட் அப் காமெடி என்ற பெயரில் பாலாஜி அவதூறு பரப்பியதற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Stand up comedian who defamed former Prime Minister Nehru


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->