'குழப்பம் விளைவிக்கவே இந்தியாவுக்குள் நுழைந்தால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'; அமித்ஷா பரபரப்பு பேச்சு..! - Seithipunal
Seithipunal


தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபர்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் , குடியுரிமை மற்றும் வெளிநாட்டினருக்கான மசோதா 2025 பற்றிய விவாதத்தில் இன்று கலந்து கொண்டு அமித்ஷா பேசினார். அப்போது அவர், இந்த மசோதாவானது, இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தும் என்றும், நிறைய மற்றும் ஒரே போன்று காணப்படும் சட்டங்கள் நீக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

குறித்த மசோதா பற்றிய விவாதத்தில் அவர் மேலும், பேசுகையில்,  தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபர்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த நாடு ஒன்றும் தரம்சாலா அதாவது ஓய்வு இல்லம் என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்காற்ற எவரேனும் இந்தியாவுக்கு வருகிறார்கள் என்றால், அவர்கள் எப்போதும் வரவேற்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.. ரோகிங்கியாக்களோ அல்லது வங்காளதேச நாட்டினரோ, குழப்பம் விளைவிக்க வேண்டும்
என்பதற்காக இந்தியாவுக்குள் வந்தால், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். அதன் பின்னர் குறித்த மசோதா, அவையில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Strict action will be taken against those who enter India to create chaos Amit Shahs sensational speech


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->