பிரதமர், குடியரசு தலைவருக்கு மாணவிகள் பரபரப்பு கடிதம்: 5 நாட்களுக்கு பிறகு பிடிபட்ட பள்ளி முதல்வர்!  - Seithipunal
Seithipunal


ஹரியானா, ஜிந்த் மாவட்டத்தில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் 60 மாணவிகளை மிரட்டி பாலியல் அத்துமீறல் செய்து தப்பிச் சென்ற பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. 

பள்ளி முதல்வர், செய்முறை தேர்வுகளில் தோல்வி அடைய செய்வதாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்வதாக 15 மாணவிகள் பிரதமர், குடியரசு தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோருக்கு 5 பக்கம் கொண்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். 

இதனை தொடர்ந்து கடந்த மாதம் 31ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக உச்சனா காவல்துறையினர் போக்சோ மற்றும் ஐபிசி 354வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 

குற்றம் சாட்டப்பட்ட 60 வயது பள்ளி முதல்வர் கடந்த 5 நாட்களாக தப்பி சென்று தலைமறைவாக இருந்ததாகவும் தற்போது டிஎஸ்பி தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். 

இது தொடர்பாக டிஎஸ்பி தெரிவித்திருப்பதாவது, ''தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வரை பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி தற்போது அவரை பிடித்துள்ளோம். 

இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளோம். குற்றம் சாட்டப்பட்ட முதல்வர் குறித்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்துள்ளோம்'' என தெரிவித்தார். 

இது தொடர்பாக ஜிந்த் துணை கமிஷனர் தெரிவித்திருப்பதாவது, 'இந்த விவாகரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகமும் முழுமையாக விசாரணை நடத்தி வருகிறது. 

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுகின்றன. விசாரணைக்கு பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Students send letter Prime Minister and President School principal arrested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->