மும்பை விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து! பறிபோன 3 உயிர்! - Seithipunal
Seithipunal


மும்பை கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு விடுதியில் திடீரென நேற்று தீ பற்றி விபத்து ஏற்பட்டதில்  3 பேர் உயிரிழந்துள்ளனர். 

மும்பை கிழக்கு பகுதியில் உள்ள பிரபாத் காலனியில் அமைந்துள்ள கிளாக்ஸி ஹோட்டல் 5 மாடி கட்டிடத்தில் மூன்றாவது தளத்தில் இருந்த விடுதியில் நேற்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த தீ அடுத்தடுத்து தளங்களுக்கு வேகமாக பரவி விடுதியில் இருந்த மெத்தை, மரச்சாமான்கள் மற்றும் படிக்கட்டுகள் என மொத்தமாக தீயில் கருகி சேதமடைந்தன. 

இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனை தொடர்ந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. 

அவர்களின் 3 பேர் ஏற்கனவே இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இரண்டு பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இது தொடர்பாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கையில், ''இந்த விடுதிக்கு தீ பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி இருந்தோம். 

ஆனால் அந்த நோட்டீசுக்கு எந்த பதிலும் அளிக்கப்படாததால் இந்த வழக்கு நீதிமன்றத்தில் தொடுத்திருக்கிறோம். பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள சட்ட விரோதமான விடுதியின் கட்டமைப்பில் விதிகளை மீறியதற்காக நிர்வாகத்தின் மீது மும்பை மாநகராட்சி தக்க நடவடிக்கை எடுக்கும்'' என தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sudden fire accident in Mumbai hotel


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->