இல்லத்தரசிகளுக்கு பேரதிர்ச்சி.. உக்ரைன் போர் விவகாரம் கிச்சன் வரை எதிரொலி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் சூரிய காந்தி எண்ணெய் அதிக அளவில் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் 80% உக்ரைன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருவதால் சூரியகாந்தி எண்ணெய் விலை லிட்டருக்கு ரூபாய் 40 வரை உயர்ந்துள்ளது.

இதற்கு முன்னதாக ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது போர் தொடங்கிய பிறகு ஒரு லிட்டர் 196 ரூபாய் வரை விலை உயர்வை சந்தித்துள்ளது.

அதேபோல் மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் விலையும் அதிகரித்துள்ளது. ஒரே வாரத்தில் சமையல் எண்ணெய் விலை இவ்வளவு அதிகரித்துள்ளது இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sun flower oil price increased


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->