புல்டோசர் கலாச்சாரம்: தடையை நீட்டித்த உச்சநீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் குற்ற செயல்களில் ஈடுபடுவோரின் வீடுகளை புல்டோசர்கள் கொண்டு இடிக்கும் விவகாரத்தை எதிர்த்தும், நாடு முழுவதும் குடியிருப்புகள் இடிக்கப்படும் விவகாரத்தில் வழிகாட்டுதல்கள் வழங்குவது தொடர்பான வழக்கும் இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

பெரிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதாலேயே, அவர்களது வீடுகளை புல்டோசரை கொண்டு இடிக்கும் செயலை அனுமதிக்க முடியாது. ஒருவர் மீது கிரிமினல் புகாரோ அல்லது குற்றச்சாட்டு  எழுந்தாலே அவரது வீட்டை இடிக்க வேண்டும் என்று உள்ளதா? என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதற்க்கு மத்திய அரசு தரப்பில், "பாலியல் வன்கொடுமை , தீவிரவாத செயல் உள்ளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகள் தொடர்பானவர்களின் வீடுகள் இடிக்கப்படுகிறது.

மேலும் ஒரே நாளில் நோட்டீஸ் கொடுத்து வீடுகள் இடிக்கப்படுவதில்லை,பல நாட்களுக்கு முன் நோட்டீஸ் அளித்து உரிய நேரம் வழங்கியப் பின்னரே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரும் குறிவைக்க படுவதில்லை, மாறாக குற்றம் செய்த நபர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வீடுகள், கட்டடங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் 10 நாட்களாவது அவகாசம் கொடுக்கப்படுகிறது. வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் வழங்க உள்ளது என்றால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், "ஆக்கிரமிப்பு எந்த வகையில் இருந்தாலும் அனுமதிக்க முடியாது. கோயில், குருத்வாரா, தர்கா என எதுவாக இருந்தாலும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலோ, சாலைகள் அல்லது நீர்நிலைகளை ஆக்கிரமித்து, பொது சொத்தை ஆக்கிரமித்து இருப்பதையோ ஏற்க முடியாது.

ஆக்கிரமிப்பு கட்டடங்களை, கட்டுமானங்களை அகற்ற சட்டம் உள்ளது, அவை மதம், சமயம் என அனைத்துக்கும் அப்பாற்பட்டு பொதுவானது என்று தெரிவித்த neethipathikal, அனுமதியின்றி குடியிருப்புகளை இடிப்பதற்கு விதித்த இடைக்கால தடையை நீட்டித்து, தீர்ப்பை ஒத்திவைத்தது உத்தரவிட்டனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court bulldozer Central Govt


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->