#BREAKING:: விக்டோரியா கவுரியின் நீதிபதி நியமனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு..!! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக முன்னாள் பாஜக நிர்வாகி விக்டோரியா கவுரி நியமனம் செய்வதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு..!!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் நியமிப்பதற்காக 8 பேரின் பெயர்களை சமீபத்தில் உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அந்த பட்டியலில் 5 மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் 3 நீதி துறை அலுவலர்களை நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது.

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மதுரை உயர்நீதிமன்ற கிளையின் மத்திய அரசு வழக்கறிஞராக இருக்கும் விக்டோரியா கவுரி பெயரும் இடம் பெற்றிருந்தது. இவர் பாஜக ஆதரவாளராக செயல்பட்டு வந்த நிலையில் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராகவும் இந்துத்துவா கொள்கைகளுக்கு ஆதரவாகவும் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு இடங்களில் பேசியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதினர். இந்த நிலையில் இன்று விக்டோரியா கவுரி உட்பட 5 பேர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து விக்டோரியா கவுரி நியமனத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். 

சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் என்பவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமனம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்து அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி சந்திரசூட் வரும் வெள்ளிக்கிழமை விக்டோரியா கவுரி நியமத்திற்கு எதிரான வழக்கு விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Supreme Court case against appointment of judge Victoria Gowri


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->