ஒரு மதத்தினால் குழந்தை திருமண தடைச் சட்டத்தை கட்டுப்படுத்த முடியாது - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
Supreme court Case Child Marriage
இந்தியாவில் தனி நபர் அல்லது ஒரு மதத்தினால் குழந்தை திருமண தடைச் சட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை பெண்களின் திருமண வயது 18 ஆகவும், ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் உள்ளது. இதனை மேலும் உயர்த்த அதாவது பெண்ணின் திருமண வயதை 21 ஆகி உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தற்போது 18 - 21 இந்த வயதுக்கு கீழ் திருமணம் செய்து கொண்டால், அது குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க இடம் உள்ளது.
இருப்பினும் கடந்த மூன்று ஆண்டுகளாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தை திருமணங்கள் நடந்து வருகின்றது.
எனவே, இந்த குழந்தை திருமணங்களை தடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது.
அதில், எந்த ஒரு தனி நபராலும், ஒரு மதத்தின் தனிப்பட்ட சட்டங்களாலும் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தை கட்டுப்படுத்த முடியாது.
குழந்தை திருமணங்கள் தங்கள் துணையை தேர்ந்தெடுக்கும் தனிநபர் உரிமையை பறிக்கக் கூடிய ஒரு செயலாகவே கருதப்படும்.
குழந்தை திருமணங்களை தடுப்பதற்கு காவல்துறை தரப்பில் சிறப்பு பிரிவு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே நாடு முழுவதும் மாவட்ட அளவில் குழந்தை திருமண தடுப்பு அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை மத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
English Summary
Supreme court Case Child Marriage