மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!!
Supreme Court Condemns Central Govt
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்டவற்றை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். அதன் அடிப்படையில் நீதிபதிகளின் நியமனத்தை மத்திய அரசு வெளியிடும்.
இதன் நிலையில் மத்திய அரசு நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் செய்வதால் பிரச்சனை உருவாகிறது. எனவே நீதிபதிகள் நியமனத்திற்கான காலவரை நிர்ணயிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது "கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளில் ஒரு சிலரை மட்டுமே மத்திய அரசு நியமிப்பது ஏற்புடையதல்ல. நீதிபதிகளை தேர்ந்தெடுத்து நியமிக்கும் போக்கை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மத்திய அரசு இந்த போக்கால் நீதிமன்றத்தில் ஒழுங்கின்மை ஏற்பட காரணமாக அமைந்து விடும். எனவே கொலீஜியம் செய்யும் பரிந்துரை செய்த நீதிபதிகளின் நியமனங்களை மத்திய அரசு உடனடியாக பரிசீலனை செய்து நியமிக்க வேண்டும்" என உச்ச நீதிமன்றம் தனது கண்டனத்தை பதிவு செய்து மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது
English Summary
Supreme Court Condemns Central Govt