பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான வழக்கு... உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!! - Seithipunal
Seithipunal


பீகாரில் சாதிவாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் மார்ச் மாதம் முதல் பீகார் மாநிலம் முழுவதும் சாதி வாரிய கணக்கெடுப்பை முழு வீச்சில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வழக்கறிஞர் வருண்குமார் சின்கா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் "மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நாடாளுமன்றத்தால் மட்டுமே செய்யக்கூடிய நடைமுறை.

இதன் மூலம் விதிமுறைகளை மீறி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் .அனைவருக்கும் சமமான சட்ட பாதுகாப்பு அளித்தல் ஆகியவற்றை நிலைநிறுத்தம் இந்திய அரசியல் சாசன சட்டம் 14வது பிரிவை பீகார் அரசு மீறுவதாக இருக்கிறது. எனவே பீகார் அரசு மேற்கொண்டுள்ள சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு அதிகாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்" என அந்த மனுவில் தெரிவித்து இருந்தார். 

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர் கவாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் "சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. இதுகுறித்து பீகார் உயர்நீதிமன்றத்தை நாடுங்கள்" என வழக்கறிஞருக்கு அறிவுரை வழங்கி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். இதற்கிடையே சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசுகளே மேற்கொள்ளலாம் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court dismissed the petition against Bihar caste based census


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->