வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா - அனைத்து வழக்குகளையும் விசாரிக்க முடிவு.!!
supreme court investigation waqf law all case
மத்திய அரசு வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் செய்து எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றியது. இதையடுத்து அந்த சட்ட மசோதா குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
அதன் படி அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் கடந்த 5-ம் தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இந்த சட்டம் நேற்று முன்தினம் அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.
இதற்கிடையே, வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதேசமயம் மத்திய அரசு தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்களை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும் முன்பு தங்கள் தரப்பு விளக்கத்தையும் வாதங்களையும் கேட்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்களை வரும் 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.
English Summary
supreme court investigation waqf law all case