முஸ்லிம் மதராஸ் பள்ளிகளுக்கு தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


இஸ்லாமிய மதத்தின் பள்ளிகளான மதராசாக்களை மூடி, அங்கு பயிலக்கூடிய மாணவர்களை அரசு பள்ளிக்கு மாற்ற வேண்டுமென்று, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அனைத்து மாநில அரசுக்கும் பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரையை ஏற்ற திரிபுரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களில் மதராசா பள்ளி மாணவர்களை அரசுப் பள்ளிக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்திருந்தது. 

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் வழக்கு விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பள்ளிகளை மூடுவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கும், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கும் அதிகாரம் இல்லை என்று வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பரிந்துரைக்கு தடை விதித்து உத்தரவிட்டதுடன், உத்திர பிரதேசம் திரிபுரா உள்ளிட்ட மாநில அரசுகளின் உத்தரவுகளுக்கும் இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme court order Islam school


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->