#BigBreaking :: பணமதிப்பிழப்பு செல்லும்..அனைத்து மனுக்களும் தள்ளுபடி... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். இந்த நிலையில் மத்திய அரசின் இத்தகைய முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 57 ரீட் மனுக்கள் உட்பட நூற்றுக்கணக்கான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. 

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்துல் நசீர், பி.ஆர்.கவாய், போபண்ணா, ராமசுப்பிரமணியம், பி.வி.ரத்னா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அந்த தீர்ப்பில் மத்திய அரசு எடுத்த கொள்கை ரீதியிலான முடிவு செல்லும் எனவும் பணமதிப்பிழப்பிற்கு எதிராக தொடங்கப்பட்ட அனைத்தும் மனுக்களையும் அரசியல் தள்ளுபடி செய்வதாகவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்பது உறுதியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court order the favor of central govt in demonetization case


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->