பணமதிப்பிழப்பு செல்லுமா...?!! உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு...!! - Seithipunal
Seithipunal


கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீரென அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளானார்கள். இந்த நிலையில் மத்திய அரசின் பண மதிப்பிழப்புக்கு எதிராக 57 ரிட் மனுக்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணை செய்தது. 

இந்த விசாரணையின் போது "மத்திய அரசு பண மதிப்பிழப்பு விவகாரத்தில் தவறான முடிவு எடுத்துள்ளது. இதனால் நாட்டில் உள்ள பொதுமக்கள் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மத்திய அரசின் இத்தகைய முடிவுக்கு தடை விதிக்க வேண்டும்" என வாதிட்டனர். 

அதேபோன்று "பண மதிப்பிழப்பு நடவடிக்கை மறு பரிசீலனை செய்யக்கூடாது. இந்த விவகாரத்தில் அனைத்தும் ஆய்வு செய்த பின்னரே முடிவெடுக்கப்பட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு தடை விதிக்கப்பட்டால் பிந்தைய காலத்திற்கு செல்லும் சூழல் ஏற்படும். இதனால் உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டாம்" என மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி தீர்ப்பு வழங்கும் தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்துல் நசீர், பி.ஆர்.கவாய், போபன்னா, ராமசுப்பிரமணியம், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு தீர்ப்பு வழங்கவுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court verdict today in demonetization case


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->