ஹோலி கொண்டாட்டத்தில் கஞ்சா போதைப்பொருள் கலந்த இனிப்புகள் விற்பனை; அதிர்ச்சியில் தெலுங்கானா.. !
Sweets mixed with cannabis are sold during the Holi celebration; Telangana in shock
ஹோலி கொண்டாட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட இனிப்புகளில் கஞ்சா கலந்து விற்பனை செய்துள்ள சம்பவம் தெலுங்கான மாநிலம் தூல்பேட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த கொண்டாட்டத்தின் போது குல்பி, சாக்லேட்டுகள் மற்றும் இனிப்புகள் அங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த இனிப்புகளில் கஞ்சா கலந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் தூல்பேட் பகுதியில் ஹோலி கொண்டாட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட இனிப்புகளை ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிவந்துள்ளது. அதாவது, அங்கு விற்பனை செய்யப்பட்ட குல்பி, சாக்லேட்டுகள் மற்றும் இனிப்புகளில் கஞ்சா கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த இனிப்புகளை விற்பனை செய்த சத்திய நாராயண சிங் என்கிற விற்பனையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், அங்கு விற்பனைக்காக வைத்திருந்த மேலும் 100 கஞ்சா கலந்த குல்பி மற்றும் 71 இனிப்புகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூல்பேட் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
.
English Summary
Sweets mixed with cannabis are sold during the Holi celebration; Telangana in shock