மாணவிகளிடம் அந்த வீடியோவை காட்டி அடிக்கடி அழைப்பு.. ஆசிரியருக்கு நூதன தண்டனை கொடுத்த மக்கள்.!
Teacher sexual Harrasment for school girl in uthrakhand
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு செருப்பு மாலை அணிவித்து பொதுமக்கள் தண்டனை அளித்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் நவ்முண்டி என்ற கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் ஆபாச வீடியோ காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவிகள் 6 பேர் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து, ஆத்திரமடைந்த பெற்றோர் பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பள்ளி உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று கூடி பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை கடுமையாக தாக்கி அவரது சட்டையை கிழித்து, முகத்தில் மை பூசி, செருப்பு மாலை அணிவித்து ஊர் முழுவதும் சுற்றிவர வைத்துள்ளனர்.
English Summary
Teacher sexual Harrasment for school girl in uthrakhand