போதைப் பொருட்களுக்கு எதிராக நடவடிக்கை: தெலங்கானா முதல்வர் திட்டவட்டம்!
Telangana Chief Minister drug against Action
தெலுங்கானா மாநிலத்தில் போதை பொருட்கள் விற்பனைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதில் காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனை அடுத்து ரேவந்த் ரெட்டி மாநில முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தெலுங்கானா செயலகத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு தொடர்பான கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதல்வர், மதுவிலக்கு துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், டி.ஜி.பி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் போதைப் பொருட்கள் நுகர்வு மற்றும் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
விரைவில் தெலுங்கானா மாநிலம் போதை பொருட்கள் தடுப்பு பிரிவுக்கு முழு நேர இயக்குனரை நியமிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் நாட்டிலேயே போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தெலுங்கானா உயர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து போதைப்பொருள் விற்பனை தடுப்பதற்கு கூடுதல் முன்னுரிமை அளித்து அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
English Summary
Telangana Chief Minister drug against Action