தெலுங்கானா தோ்தல்: பறக்கும் படையினரிடம் சிக்கிய ஹவாலா பணம்! வெளியான அதிர்ச்சி பட்டியல்! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா பேரவை தேர்தல் தொடர்பாக பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 64 கிலோ தங்கம், 59 கோடி ரொக்கம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

தேர்தலில் வாக்காளர்களை சேகரிக்கும் வகையில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் போன்றவை வழங்குவதை தடுக்கும் நோக்கில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்துவது வழக்கமான ஒன்றாகும். 

அதன்படி தெலுங்கானாவில் நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் தெரிவித்திருப்பதாவது, இதுவரை தேர்தல் பறக்கும் படையினர் ரூ. 58.96 கோடி பணம், 64.2 கிலோ தங்கம், 400 கிலோ வெள்ளி, ரூ. 6.64 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ. 2.97 கோடி போதை பொருட்கள், ரூ. 6.89 கோடி மதிப்பிலான பரிசு பொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அக்டோபர் 16ஆம் தேதி வரை பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, பரிசு பொருள்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ. 109. 11 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாநிலம் முழுவதும் காவல்துறை மற்றும் பிற விசாரணை அமைப்புகளும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

நவம்பர் 30ஆம் தேதி தெலுங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் தலைமையிலான கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றும் வகையில் களமிறங்கியுள்ளது. முக்கிய எதிர்கட்சி களத்தில் காங்கிரஸ், பா.ஜ.க ஆகியவை உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana election caught money flying soldiers


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->