கால கொடுமை! குடிக்கார பெற்றோர்! அறிவுரை வழங்கிய மூத்த மகனை கொலை செய்ய திட்டம்! போதையில் இளைய மகனை வெட்டி கொலை செய்த பெற்றோர்! - Seithipunal
Seithipunal


தெலுங்கானாவில் மூத்த மகன் மீது உள்ள கோபத்தில் மூத்த மகனை கொலை செய்ய நினைத்து இரண்டாவது மகனை கொன்ற பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெற்றோர்கள் இருவருக்கும் தினந்தோறும் அதிக அளவில் மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தினதோறும் மது போதையில் இரண்டு மகன்களிடமும் தகராறு செய்து வந்துள்ளனர். இதனை கட்டத்தில் பொறுத்துக் கொள்ள முடியாத மூத்த மகன் அசோக் இருவரையும் அடித்து  அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த  இருவரும் மது போதையில்  மூத்த மகன் அசோக்கை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். கணவன் மனைவி இரண்டு பேரும் மது அருந்திவிட்டு வீட்டில் போர்வை போர்த்தியபடி தூங்கிக் கொண்டிருந்த இரண்டாவது மகன் சேகர். இவவரும் மதுபோதையில் மூத்த மகன் என நினைத்து கணவன் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து சேகரை கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

சேகரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சேகரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கணவன் மனைவி இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

தினந்தோறும் மது குடிப்பதை தட்டி கேட்டு மூத்த மகனை கொலை செய்ய திட்டம் போட்டு இளைய மகனை பெற்றோர்கள் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana parents arrested for killing their second son out of anger towards their eldest son


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->