தெலுங்கானாவில் பரபரப்பு.! சுங்கச்சாவடி ஊழியரைத் தாக்கிய எம்.எல்.ஏ.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அந்தக் கட்சியை சேர்ந்த பெல்லம்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ. துர்கம் சின்னையா மஞ்சேரியல் மாவட்டத்தின் மண்டமரி சுங்க சாவடி வழியே செல்லும்போது, அவரது காரை சுங்கத் சாவடி ஊழியர்கள் வழக்கம்போல் நிறுத்தியுள்ளனர். 

இதனால், ஆத்திரமடைந்து காரை விட்டு கீழே இறங்கிய எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுங்க சாவடி பணியாளர்களை நோக்கிச் சென்றபோது எம்.எல்.ஏ.வை நெருங்கிய பணியாளர் ஒருவரை அவர் அடிக்க சென்றுள்ளார். இதனை பார்த்த அவரது ஆதரவாளர்கள் அவரைத் தடுத்து, சமரசப்படுத்தி அழைத்து சென்றனர். 

இதையடுத்து, அவர் காரில் ஏறாமல் அந்த வழியே வந்த சரக்கு வேன் ஒன்றை, கையசைத்து முன்னே செல்லும்படி கூறினார். அந்த வேன் சென்ற பின்னர், துர்கம் தனது காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இந்த காட்சிகள் வீடியோவாக வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. 

தேசிய நெடுஞ்சாலையில் பணிகள் முடிக்கப்படாமல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற கோபத்தில் இவ்வாறு நடந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. 

இருப்பினும், இந்த சம்பவம் குறித்து மண்டமரி வட்ட காவல் ஆய்வாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, "சமூக ஊடகத்தில் இந்த வீடியோவை பார்த்தோம். எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

telungana MLA attack customs both employe


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->