பயங்கரவாதி தஹாவூர் ராணாவை 18 நாட்கள் என்.ஐ.ஏ. காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு..!
Terrorist Tahawwur Rana to be remanded in NIA custody for 18 days court orders
மும்பை பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதி தஹாவூர் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவனை இந்தியாவுக்கு நாடுகடத்தி கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இந்நிலையில், இன்று அவன் இந்தியா கொண்டு வரப்பட்டான்.
பயங்கரவாதி தஹாவூர் ராணா டெல்லி வந்தடைந்ததும் என்.ஐ.ஏ. முறையாக ராணாவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. அத்துடன், தஹாவூர் ராணாவை நேற்று இரவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் டெல்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டான்.

இந்நிலையில், அவனை 20 நாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். என்.ஐ.ஏ. மனுவை விசாரித்த சிறப்பு தேசிய புலனாய்வு முகமை நீதிபதி சந்தர் ஜித் சிங், ராணாவை காவலில் எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணாவை 18-நாள் என்.ஐ.ஏ. காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . இதையடுத்து அவனை தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
English Summary
Terrorist Tahawwur Rana to be remanded in NIA custody for 18 days court orders