அரசிதழில் வெளியீட்ட புதிய அறிவிப்பு!!! தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை...!!!
New announcement Priority government jobs those who studied Tamil medium
அரசிதழில், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் படித்தவர்களுக்கான அரசுபணியில் முன்னுரிமை என்ற விதி பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசிதழில்:
அதில் தெரிவித்தாவது,"கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 2-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நேரடியாக பள்ளிகளில் சேர்ந்து, தமிழ் மொழியினை பயிற்று மொழியாக கொண்டு பயின்று தேர்ச்சி பெற்றவர்களுக்கும், பிற மாநிலங்களில் தமிழ் மொழியினை பயிற்று மொழியாக கொண்டு பயின்று, பின்னர் தமிழ் நாட்டில் தங்களது கல்வியினை சேரும் வகுப்பில் இருந்து தொடர்ந்து தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் மேற்படி முன்னுரிமை வழங்க தகுதி உடையவர்கள் என்றும் பள்ளி செல்லாமல் நேரடியாக தனித் தேர்வர்களாக தமிழ் வழியில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த முன்னுரிமை வழங்க தகுதி உடையவர்கள் அல்ல " என்று அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,அரசு பொதுத் தேர்வுகளின் தனித் தேர்வர்களாக தேர்ச்சி பெற்று தொடர்ந்து கல்லூரிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் இது பொருந்தும்.
கல்வி மற்றும் மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றில் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்கள் என்பதை நியமன அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இது ஐகோர்ட்டு உத்தரவின் படி விதிகளை திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
New announcement Priority government jobs those who studied Tamil medium