நாடு முழுவதும் Indian Standard Time வரைவு விதிகளை வெளியிட்ட மத்திய அரசு; விதிகளை மீறினால் அபராதம்..!
The central government has issued draft rules for Indian Standard Time across the country
நாடு முழுவதும் Indian Standard Time (IST) நேரத்தை கட்டாயமாக்கி மத்திய அரசு புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.
இந்திய நாட்டின் உள்கட்டமைப்பில் முக்கியத்துவம் வாய்ந்த தொலைத்தொடர்பு, வங்கி, பாதுகாப்பு, 5ஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற துறைகளில் ஒரே நேரத்தை பின்பற்றுவதை உறுதிப்படுத்துவதற்காக வரைவு விதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வரைவு விதிகள் குறித்து பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய வரைவு விதிகள் அதிகாரபூர்வ, வர்த்தக, நிதி, நிர்வாகம், சட்ட ஒப்பந்தங்கள் என அனைத்து விதமான பயன்பாடுகளிலும் Indian Standard Time -யை மட்டுமே பின்பற்ற வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், Indian Standard Time -யை தவிர பிற நேர திட்டங்களைப் பின்பற்றுவதற்கு இந்த விதிகளின்கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அறிவியல் ஆய்வு, வானியல், கடற்பயணம் உள்பட குறிப்பிட்ட சில துறைகளுக்கு மட்டும் அரசின் முன் அனுமதியுடன் இந்த விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
The central government has issued draft rules for Indian Standard Time across the country