கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்..!
The court sentenced Sanjay Rai the accused in the murder of a female doctor in Kolkata to life imprisonment
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த ஆகஸ்டு 09ந் தேதி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நாட்டின் பெரிய அளவில் கொந்தளிப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. குறித்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
அத்துடன், மேற்கு வங்காளத்தில் வாரக்கணக்கில் ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம் என டாக்டர்கள் போராடினர். அவர்களுக்கு ஆதரவாக சினிமாத்துறையினர், விளையாட்டு பிரபலங்கள், சமூக அமைப்புகளும் களத்தில் இறங்கி ஆதரவு தெரிவித்தனர்.

மறுபுறம் மேற்கு வங்காளத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக,காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டக்களத்தில் குதித்து நெருக்கடியை ஏற்படுத்தின.
இந்த கொடூர சம்பவத்தை ஏற்படுத்திய சஞ்சய் ராய் என்ற தன்னார்வலர் கைது செய்யப்பட்டார். அந்த மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கடி வந்து செல்லும் அந்த நபர், சம்பவத்தன்று அந்த டாக்டர் தனியாக இருப்பதை பார்த்து இந்த கொடூரத்தை அரங்கேற்றி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய கொல்கத்தா உயர்நீதிமன்றம், வழக்கின் விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்த உச்சநீதிமன்றமும் பல்வேறு உத்தரவுகளை மாநில அரசுக்கு பிறப்பித்தது.

ஒட்டு மொத்த நாட்டையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு சியல்டா மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இதில் கடந்த நவம்பர் 12 முதல் கேமரா முன்பு விசாரணை நடந்து வந்தது. இதில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. மிகவும் வேகமாக நடந்து வந்த விசாரணை கடந்த 09ந் தேதியுடன் முடிவடைந்தது.
தற்போது தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதன்படி இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. பெண் டாக்டர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தன்னார்வலர் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
English Summary
The court sentenced Sanjay Rai the accused in the murder of a female doctor in Kolkata to life imprisonment