கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் ரூ.300 கோடி மதிப்பு சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை..! - Seithipunal
Seithipunal


கர்நாடகா முதல்வர் சித்தராமையா மீதான வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக ரூ.300 கோடி  மதிக்கத்தக்க அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. 

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊர், மைசூரு தாலுகா, வருணா அருகே சித்தராமயனஹுண்டி கிராமம். அவர் 'மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகளை வாங்கி கொடுத்ததாக, சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதி அளித்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது விவகாரம் தொடர்பாக, சித்தராமையா மீது அமலாக்கத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில், நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக ரூ.300 கோடி மதிப்புள்ள 140 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இவ்வாறு முடக்கப்பட்ட சொத்துகள் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மற்றும் ஏஜென்ட்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களில் உள்ளது என அமலாக்கத்துறை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Enforcement Directorate has frozen assets worth Rs300 crores of Karnataka Chief Minister Siddaramaiah


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->