டெல்லியில் நாளை முதல் வெப்ப அலை வீசும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
The first heat wave will hit Delhi tomorrow
டெல்லியில் நாளை முதல் மீண்டும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில ஆண்டை விட வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கோடைகாலம் தொடங்கியது முதலே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அந்த புவியியல் பல்வேறு மாநிலங்களிலும் வெப்பநிலை 40-45 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளது.
டெல்லி ஹரியானா ராஜஸ்தான் ஒடிசா உத்தர பிரதேசம் ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸூக்கு மேல் பதிவாகி வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் நாளை முதல் வரும் 15ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம் நாளை வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என தெரிவித்துள்ளது. நேற்று டெல்லியில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இது நடப்பாண்டில் இயல்பான வெப்ப அளவை விட ஒரு டிகிரி அதிகமாகும்.
English Summary
The first heat wave will hit Delhi tomorrow