இந்தியாவை உலுக்கிய சம்பவம்! மணிப்பூரில் முதல்வர் வீடு அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு: பாதுகாப்பு அதிகரிப்பு!
The incident that shook India Explosive discovery near Chief Minister house in Manipur
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் வெடித்த குக்கி மற்றும் மைதேயி சமூகங்களுக்கிடையேயான மோதல் தொடர்ந்து வன்முறையாக நீடித்து வருகிறது. சமீப நாட்களாக மீண்டும் கலவர சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மணிப்பூர் முதல்-மந்திரி என். பிரேன் சிங்கின் வீட்டுக்கு அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லுவாங்ஷாங்பாம் பகுதியில் முதல்-மந்திரி விடு அருகே வெடிக்காத மோட்டார் வெடிகுண்டு ஒன்று கிடந்ததாக தகவல் வந்ததை தொடர்ந்து, போலீசார் அதனை கைப்பற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர்.
அப்பகுதி மக்கள் தெரிவித்த தகவலின்படி, நேற்று இரவு ராக்கெட் மூலம் வெடிகுண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதுவே வெடிக்காத நிலையில் இருந்ததால் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.
சம்பவம் தொடர்பாக போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம், ஏற்கனவே போராட்டங்கள், கலவரங்கள் காரணமாக பதற்றமடைந்து இருக்கும் மணிப்பூர் மக்களிடையே மேலும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The incident that shook India Explosive discovery near Chief Minister house in Manipur