படம் பார்க்க அரைநாள் விடுமுறை-முதல்வர் அறிவிப்பு.!
The Kashmir Files to watch half day leave for assam
தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படத்தை பார்ப்பதற்காக அரைநாள் விடுமுறை அளித்துள்ளதாக அசாம் மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
பாலிவுட் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படத்தை பார்க்க அரசு ஊழியர்களுக்கு அரைநாள் விடுமுறை என அசாம் மாநில முதல்வர் அறிவித்துள்ளார். மேல் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கிவிட்டு மறுநாள் பணிக்கு வரும்போது தியேட்டரில் வாங்கிய டிக்கெட்டை காண்பித்தால் போதும் என்று அசாம் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தை பார்ப்பதற்காக காவல் துறையினருக்கு ஒரு நாள் விடுமுறை என மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
The Kashmir Files to watch half day leave for assam