திடீர் மாற்றம்! பெங்களூரில் ஒன்று கூடும் எதிர்க்கட்சிகள்!
The next Opposition party meeting in Bengaluru NCP chief Sharad Pawar
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று, காங்கிரஸ், திரிணாமுல், ஐக்கிய ஜனதா தளம், ஆம்ஆத்மி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வருகின்றன.
கடந்த 2019 தேர்தல் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை இல்லாததுதான் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்து உள்ளதாக காங்கிரஸ் தனது ஆதங்கத்தை இன்றுவரை வெளிப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு கைமேல் பலன் கிடைக்க தொடங்கியுள்ளது.
அதன்படி, கடந்த 23ம் தேதி பீகார், பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு யாரும் தலைமை இல்லை. ஆனால், இந்த கூட்டத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட காங்கிரஸ், முதன்மையாக இருந்து பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டது.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் நடைபெற உள்ளதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார். வருகின்ற ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக சரத் பவார் தெரிவித்துள்ளார்.
English Summary
The next Opposition party meeting in Bengaluru NCP chief Sharad Pawar