இனி பாஸ்போர்ட் இணையதளம் இயங்காது....காரணம் தெரியுமா?
The passport website is no longer working do you know the reason
வரும் 29-ம் தேதி முதல் தொழில்நுட்ப காரணங்களால் பாஸ்போர்ட் சேவை இணையதளம் 3 நாட்களுக்கு இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2-ந்தேதி காலை 6 மணி வரை இயங்காது என்று தெரிவித்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 30-ம் தேதிக்கான அனைத்து நேர்காணல்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ஆகஸ்ட் 30-ம் தேதியன்று நேர்காணல் உறுதி செய்யப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அடுத்த நேர்காணல் குறித்த தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பொது விசாரணை நேர்காணல் அலுவலகம் ஆகஸ்ட் 30ம் தேதி மட்டும் செயல்படாது என்று, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது விண்ணப்பதாரர்களிடையே கடும் அவதியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The passport website is no longer working do you know the reason