32 லட்சம் கோவில்களை ஒரே கூட்டமைப்பில் கொண்டுவர திட்டம்..!
The plan to bring 32 lakh temples under one federation
உலகளவில் உள்ள பிரபலமான 32 லட்சம் கோவில்களை ஒரே கூட்டமைப்பின் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஆன்மிக சுற்றுலாக்களை முறையாக ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த 32 லட்சம் கோவில்களுக்கான சுற்றுலா சந்தை மதிப்பு ஆண்டுக்கு 06 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இத்தகைய வருவாய் ஈட்டக்கூடிய ஆன்மிக சுற்றுலாவை ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதாள் சந்தை மதிப்பு அதிகரிக்க கூடும்.
எளிதான முறையில் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் கோவில்களை அணுகுவதை உறுதி செய்யும் ஒரு திட்டமாக அமையவுள்ளது. அத்துடன், இதன் முதல் முயற்சியாக, பிப்ரவரி 17 முதல் 19 வரை திருப்பதியில் சர்வதேச கோவில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி நடக்கவுள்ளது.
![](https://img.seithipunal.com/media/gold-w7n97.jpg)
குறித்த மாநாட்டில் 32 லட்சம் கோவில்களை ஒரே கூட்டமைப்பின் கீழ் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மேலும், ஐ.டி.சி.எக்ஸ் 2025 மாநாடு ஹிந்து, சீக்கிய, பௌத்த மற்றும் ஜெயின் ஆன்மிக நிறுவனங்களை ஒருங்கிணைத்து நடத்தப்படுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, உலகளவில் ஆன்மிக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அதாவது, வைஷ்ணவ தேவி கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் 32,000 முதல் 40,000 யாத்ரீகர்கள் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது தொற்றுநோய்க்கு முந்தைய காலகட்டத்தில் 10,000 முதல் 15,000 வரை இருந்தமாய் குறிப்பிடத்தக்கது.
மேலும் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு தினமும் குறைந்தது ஒரு லட்சம் பேர் வருகை தருவதாகவும், இது கோவிட் தொற்றுநோய்க்கு முந்தைய எண்ணிக்கையை விட அதிகம் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
![](https://img.seithipunal.com/media/gold 1-3z9zr.jpg)
கேரளா குருவாயூர் கோவிலுக்கு தினசரி 6,000 முதல் 7,000 வரை பக்தர்கள் வருகின்றனர். இது கோவிட் தொற்றுநோய்க்கு முந்தைய காலக்கட்டத்தில் 4,000 ஆக இருந்துள்ளது. அங்கும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை வளர்ச்சி அடைந்து வருகிறது.
இதனால் மக்களுக்கு எளிதான முறையில் பயணம் மேற்கொள்ள, உலக அளவில் உள்ள கோவில்கள் அனைத்தையும் ஒரு கூட்டமைப்பின் கீழ் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டமைப்பில் இடம் பெறும் கோவில்களில் அதிக அளவிலான கோவில்கள் இந்தியாவில் உள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
The plan to bring 32 lakh temples under one federation