17 வயது கல்லூரி மாணவியை ஏமாற்றி திருமணம்.. பேராசிரியர் போக்சோவில் கைது..!
The professor who cheated the 17 year old college girl and married him was arrested in Andhra
ஆந்திராவில் 17 வயது கல்லூரி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்த பேராசிரியரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
ஆந்திர பிரதேச மாநிலம் கங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் தனியார் கல்லூரி பேராசிரியர் சலபதி(33). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சலபதி கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவி ஒருவருடன் பழகி வந்துள்ளார். மேலும் அந்த மாணவியிடம் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.
இதையடுத்து சலபதி கடந்த புதன்கிழமை மாணவியை ஏமாற்றி திருப்பதிக்கு அழைத்துச்சென்று கோவிலில் தாலி கட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து, சலபதிக்கு திருமணமாகி மகள் இருப்பது மாணவிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சடைந்த மாணவி, இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் கங்காபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், 17 வயது கல்லூரி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்த பேராசிரியர் சலபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
The professor who cheated the 17 year old college girl and married him was arrested in Andhra