உலக வர்த்தகத்தில் இந்தியா 03-வது இடம்; முதலிடத்தில் சீனா..?
The study reports that India will take 03rd place in world trade
இந்தியா அடுத்த 05 ஆண்டுகளில் உலக வர்த்தகத்தில் 06 சதவீத பங்களிப்புடன், 03-வது இடத்திற்கு வரும் என ஆய்வுகள் கூறுகிறது.
நியூயார்க் யுனிவர்சிட்டி ஸ்டெர்ன் ஸ்கூல் ஆப் பிசினஸ் மற்றும் டி.எச்.எல். இணைந்து நடத்திய ஆய்வில், அடுத்த 05 ஆண்டுகளில் உலக வர்த்தகத்தில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கிய நாடுகளில் இந்தியா 03-வது இடத்தை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சீனா 12 சதவீதத்துடன் முதல் இடத்திலும், அமெரிக்கா 10 சதவீதத்துடன் 02-வது இடத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த 2024-ஆம் ஆண்டில் உலக வர்த்தகத்தில் இந்தியா 13வது இடத்தில் இருந்தது. இந்தக் காலகட்டங்களில் உலக வர்த்தக வளர்ச்சி 02 சதவீதமாக இருந்த போதும், இந்தியாவின் வளர்ச்சி 5.2 சதவீதமாக இருந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் விரைவான வணிக வளர்ச்சி, அதன் வேகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் பன்னாட்டு வணிகத்தில் அதிகரித்து வரும் பங்களிப்பு ஆகிய இரண்டையும் பிரதிபலிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவை விட சீனா வர்த்தகம் சார்ந்த பொருளாதாரத்தில் முன்னிலை வகிப்பதாகவும், 2023-ஆம் ஆண்டில் இந்தியாவின் சரக்கு வர்த்தகம், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் சீனாவை விட அதிகரித்தே காணப்பட்டுள்ளது. அதாவது, சரக்கு மற்றும் சேவையில் சீனாவை விட இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்கால வர்த்தக சந்தையில் இந்தியாவின் வளர்ச்சியானது, உற்பத்தி துறையில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளால் இன்னும் வலுப்பெறும் என்று அந்த ஆய்வின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
The study reports that India will take 03rd place in world trade