முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு இல்லையா? அறுவை சிகிச்சை செய்ய மறுத்த அரசு மருத்துவமனை - முன்னாள் அமைச்சர் வேதனை!
Chengalpattu Govt Hospital Treatment issue
சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட்டில் கட்டுமான தொழிலாளியாக பணிபுரியும் மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஹரதன் பவுரிக்கு சாலை விபத்தில் கால் எலும்பு முறிந்தது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு இல்லாததால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்.
எக்ஸ்ரே மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் எலும்பு முறிவு உறுதி செய்யப்பட்ட போதிலும், மருத்துவமனை டீன் தரப்பில் முறையீடு செய்தும் ஆறு நாட்களாக எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இறுதியில், அவரை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றி சொந்த ஊருக்கு செல்லுமாறு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். தற்போது அவர் ரயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், இந்த செய்தியை சுட்டிக்காட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழகமோ, மேற்கு வங்கமோ காயங்களுடன் அரசு மருத்துவமனையை நாடி வருபவர்களுக்கு உரிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியது நம் கடமை! பொறுப்பு!
சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட்டில் கட்டுமான தொழிலாளியான மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஹரதன் பவுரி (35) என்பவருக்கு சாலை விபத்தில் கால் எலும்பு முறிந்த நிலையில்,
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு இல்லாததால் அறுவை சிகிச்சை செய்ய மறுத்து அவரை வெளியேற்றி இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்வதோடு இனியெங்கும் இதுபோன்ற சம்பவம் நிகழாத வண்ணம் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Chengalpattu Govt Hospital Treatment issue