முதல் வெற்றியை பதிவு செய்த பிரக்ஞானந்தா..பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் அசத்தல்!
Praggnanandhaa registers his first win Brock Masters Chess Tournament!
இன்று செக்குடியரசின் தாய் டாய் வான் உடன் மோதின பிரக்ஞானந்தா போட்டியில் எளிதில் வெற்றி பெற்று நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார்.
இந்தியாவின் முதல் சிறுவயது கிரான் மாஸ்டராக இருப்பவர்தான் ரமேஷ் பாபு பிரக்ஞானந்தா. இவருடன் பிறந்த அக்காவான ஆர் வைஷாலி அவர்கள் சிறுவயதிலிருந்து இருவரும் செஸ் போட்டியில் ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார்கள். அதில் அக்கா ஆர் வைஷாலி பல காம்பெடிஷனில் கலந்து கொண்டு பல சாதனைகளை படைத்துள்ளார். மேலும் பிரக்ஞானந்தாவும் தற்போது சிறுவயதிலிருந்து செஸ்மேல் ஆர்வம் கொண்டு படிப்படியாக கற்றுக்கொண்டு தற்போது உலகில் சிறந்த செஸ் பிளேயராக பட்டத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். சிறு வயதில் யாரும் செய்யாத சாதனையை பிரக்ஞானந்தா, செய்துள்ளார்.
இந்தநிலையில் பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசில் நடந்து வருகிறது.இந்த போட்டியில் 9 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் இதில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, தனது முதல் 2 ஆட்டங்களிலும் டிரா கண்டிருந்தார்.
இதனையடுத்து பிரக்ஞானந்தா தனது 3-வது ஆட்டத்தில் இன்று செக்குடியரசின் தாய் டாய் வான் உடன் மோதினார். அப்போது விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா எளிதில் வெற்றி பெற்று நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார்.
English Summary
Praggnanandhaa registers his first win Brock Masters Chess Tournament!