நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு! சிதறிய மூன்று தோட்டாக்கள்!
Hariyana Court Gun fire
ஹரியாணா மாநிலம் அம்பலா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்த நபர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
காரில் வந்த இரண்டு பேர் இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அம்பலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து மூன்று தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.