க்ரீத் பண்டிகையின்போது ஆடுகள் பலியிடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் - அரசர் வைத்த வேண்டுகோள்!
morocco country Bakrid Goat issue
மொராக்கோ நாட்டில் நிலவும் கடும் வறட்சியால் கால்நடைகள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக, வரும் பக்ரீத் பண்டிகையின்போது ஆடுகள் பலியிடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அந்நாட்டு அரசர் வலியுறுத்தியுள்ளார்.
மொராக்கோவில் கடந்த ஏழு ஆண்டுகளாக வறட்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் கால்நடைகளின் எண்ணிக்கை 38 முதல் 40 சதவீதம் வரை குறைந்துள்ளது.
இறைச்சியின் விலை அதிகரித்து வருவதால் ஆஸ்திரேலியாவில் இருந்து சுமார் ஒரு லட்சம் செம்மறி ஆடுகளை இறக்குமதி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், அரசர் ஆறாம் முஹம்மது தொலைக்காட்சியில் வாசித்த கடிதத்தில், வறட்சியான காலங்களில் பாரம்பரியத்தை பின்பற்றி கால்நடைகளை பலியிடுவதால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் பக்ரீத் பண்டிகையின்போது ஆடுகள் பலியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
விலைகளை நிலைப்படுத்த கால்நடைகள் மீதான இறக்குமதி வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 1966 ஆம் ஆண்டு மொராக்கோவில் கடும் வறட்சி நிலவியபோது, தற்போதைய அரசரின் தந்தை இரண்டாம் ஹசன் அறிவிப்பை வெளியிட்டார்.
English Summary
morocco country Bakrid Goat issue