யூடியூப் பார்த்து சிகிச்சை! சிறுவன் உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் 15 வயது சிறுவனுக்கு யூடியூப் பார்த்து மருத்துவம் பார்த்ததால் சிறுவன் உயிரிழப்பு.

பீகார் மாநிலம்  சரண் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் கிருஷ்ணகுமார் (15). சிறுவன் பலமுறை வாந்தி எடுத்ததால் சிறுவனை அருகில் உள்ள கணபதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அவரது பெற்றோர்.

அங்கு அந்த சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுவனை பரிசோதித்து பார்த்த மருத்துவர் சிறுவனுக்கு வயிற்றில் கல் உள்ளதாகவும், அவருக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் எனவும் பெற்றோரிடம் கூறியுள்ளார். கல் உள்ளதால் தான் இவ்வாறு அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது அதனை அகற்றி விட்டால் சரியாகிவிடும் என கூறியிருக்கிறார். 

ஆனால், மருத்துவர் பெற்றோரின் சம்மதமே இல்லாமல் யூடியூப்-ஐ பார்த்து ஆபரேஷன் செய்ய தொடங்கியதாக கூறப்படுகிறது ஆபரேஷன் செய்யும் பொழுது மாணவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு  உயிரிழந்ததாக  கூறப்படுகிறது.

மாணவன் உயிரிழந்த சம்பவத்தை பெற்றோர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பெற்றோரின் புகார் அடிப்படையில் தேடிவந்த போலீசாருக்கு அவர் போலி மருத்துவர் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது போலீசார் அந்த போலி மருத்துவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Therapy by watching YouTube The boy died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->