திருப்பதி ஏழுமலையான் கோவில் ரூ.300 தரிசன டிக்கெட் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோயில். இந்த கோயிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து  பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.

அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். இதில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது.

இதில் கூட்ட நெரிசலை தடுப்பதற்காக சுவாமியை தரிசிப்பதற்கான டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட்டு வருகிறது. அதன்படி வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. 

இதனை பக்தர்கள்  http://tirupatibalaji.ap.gov.in என்ற திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirupathi Elumalayan Temple 300 ruppes dharshan ticket release


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->