தண்டவாளத்தில் அமர்ந்து PUBG விளையாடிய வாலிபர்கள் - நொடிப்பொழுதில் அரங்கேறிய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து செல்போனில் PUBG விளையாடிக்கொண்டிருந்த வாலிபர்கள் ரெயில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் ரெயில் தண்டவாளத்தில் காதில் இயர்போன் அணிந்து மூன்று வாலிபர்கள் PUBG கேம் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது ரெயில் ஒன்று வந்துள்ளது. இதனை அறியாமல் விளையாட்டில் மூழ்கி இருந்த வாலிபர்கள் மீது ரெயில் மோதியது. இதில் மூன்று பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களை அப்புறப்படுத்தி 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து அதிகாரிகள் குழந்தைகளின் விளையாட்டு பழக்கத்தை பெற்றோர்கள் கண்காணித்து, எதிர்காலத்தில் இதுபோன்ற அவலங்களைத் தடுக்க பொது இடங்களில் விழிப்புடன் இருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி அவர்களுக்குக் கற்பிக்குமாறு வலியுறுத்தி உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thre boys died for play pubg game sit on railway track in bihar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->