சோகம்... டீ குடித்த மூன்று பேர் பலி - காரணம் என்ன?
three peoples died drink tea in rajasthan
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பன்ஸ்வாரா மாவட்டம் அம்பாபுரா காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட நல்டா கிராமத்தை சேர்ந்தவர் தரியா. இவரது மருமகள் சாந்தா, கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று டீ போட்டுள்ளார். அப்போது, தவறுதலாக டீ தூளுக்கு பதிலாக கரையான் விரட்டி மருந்தை கலந்துள்ளார்.
இதனை குடித்த தரியா, மருமகள் சாந்தா, சாந்தாவின் மகன் அக்ஷ ராஜ் உள்ளிட்டோருக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த டீயை குடித்ததில், பக்கத்துவீட்டுக்காரர் உட்பட மேலும் மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து காவல் அதிகாரி தெரிவித்ததாவது:- "இந்த தேநீரில், கரையான் மருந்து கலக்கப்பட்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சமையல் அறையில் கறுப்புப் பையில் கரையான் மருந்து வைக்கப்பட்டு இருந்ததும், அதுவும் தேயிலை இலை போல இருந்ததும் தெரியவந்தது என தெரிவித்துள்ளார்.
English Summary
three peoples died drink tea in rajasthan