குஜராத்தில் அதிர்ச்சி - சாப்பிட உணவில்லாததால் குடும்பமே எடுத்த அதிரடி முடிவு.! - Seithipunal
Seithipunal


குஜராத்தில் அதிர்ச்சி - சாப்பிட உணவில்லாததால் குடும்பமே எடுத்த அதிரடி முடிவு.!

குஜராத் மாநிலத்தில் உள்ள ராவ்பூரா பகுதியை சேர்ந்த தாய் - தந்தை மற்றும் மகன் உள்ளிட்டோர் கூட்டுத் தற்கொலை செய்துள்ளனர். அறுபது வயதுடைய அந்தத் தந்தை சமீபத்தில் தனது செக்யூரிட்டி வேலையை இழந்துள்ளார். 

குடும்பத்தின் ஒற்றை வாரிசான மகனும், உடல்நிலை காரணமாக பணிக்கு செல்ல முடியாத நிலைமையில் இருந்துள்ளார். இதனால், வீட்டு வாடகை முதல் அன்றாட செலவு வரை அனைத்துமே கேள்விக்குறியாய் போனது.

இந்த நிலையில், இன்று காலை குடும்பத் தலைவர் தனது கழுத்தை அறுத்துக்கொண்டும், அவரது மனைவி விஷமருந்தியும், மகன் தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்துள்ளனர்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியதில் அடுத்த வேளைக்கு உணவில்லாமல் போனதே இந்தக் கூட்டுத் தற்கொலை முடிவுக்கான காரணம் என்பதும் போலீஸார் விசாரணையில் உறுதியானது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples sucide in gujarat for no food


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->