ரெயில்களில் தட்கல் முன்பதிவுகளில் நேரம் மாற்றம்..? ஐஆர்சிடிசி சொல்வது என்ன..?
Time change in Tatkal bookings in trains
ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக தட்கல் முறை கடைபிடிக்கப்படுகிறது. உடனடியாக பயணம் மேற்கொள்ள 24 மணி நேரத்திற்கு முன்பாக இந்த தாக்கல் முறை பயன்படுத்தப்படுகிறது.
அதாவது ரெயில்களில் நாளை பயணம் மேற்கொள்வதற்கு இன்று டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்வதற்கான தட்கல் டிக்கெட் முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கும். அதோடு, படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்ய காலை 11 மணிக்கு முன்பதிவு தொடங்கும். தட்கல் மற்றும் பிரீமியம் தக்கல் என இரண்டு வசதிகள் உள்ளது.

அத்துடன், பிரீமியர் தக்கலில் டிக்கெட் பதிவாக வாய்ப்புள்ளது. மேலும், தேவைக்கேற்ப டிக்கெட் விலையும் உயரும். ஆனால், இரண்டுக்குமான பதிவு நேரம் ஒன்றுதான். ஆனால், தக்கல் மற்றும் பிரீமியர் தக்கலுக்கு வெவ்வேறு நேரமாக மாற்றப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவிவருகின்றன.
ஆனால், தற்போதுள்ள முன்பதிவு நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை என ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Time change in Tatkal bookings in trains