திருப்பதி ஆர்ஜித சேவை ஆன்லைன் டிக்கெட் இன்று வெளியீடு..! - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையான் கோவிலின் ஜூலை மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

ஆந்திர பிரதேச மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில், உலக பிரசித்தி பெற்ற இந்தியாவில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் பெறுவார்கள்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜூலை மாதம் நடைபெறும் ஆர்ஜித சேவைகளில் பங்கேற்பதற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் ஒதுக்கப்படும்.

மேலும், ஜூலை மாதத்திற்கான திருக்கல்யாணம், ஊஞ்சல்சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம்,சகஸ்ர தீப அலங்கார சேவைபோன்ற ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்களும் இன்று காலை 11.30 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupati Arjitha Seva Online Ticket Released Today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->