ரூ.16 ஆயிரம் கோடியை முதலீடு செய்த திருப்பதி தேவஸ்தானம்!
Tirupati Devasthanam invested Rs16 thousand crores
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் தங்களால் இயன்ற பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். அதேபோல் திருப்பதி தேவஸ்தான ஏழுமலையான் பெயரில் உள்ள 10 அறக்கட்டளைகள் மற்றும் திட்டங்கள் போன்றவற்றிற்கு பக்தர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர். அவ்வாறு பெறப்படும் காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளை வரவு செலவு போக மீதி இருக்கும் பணத்தை வங்கியில் முதலீடு செய்து பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் சேவை செய்து வருகிறது.
இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.15,938 கோடி ரூபாய் பணமும் 10,858 கிலோ தங்க கட்டிகளையும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் திருப்பதி தேவஸ்தானம் முதலீடு செய்துள்ளது. மத்திய மாநில அரசுகள் வெளியிடும் பத்திரங்களில் முதலீடு செய்வதில்லை என திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
மத்திய மாநில அரசுகள் வெளியிடும் பத்திரங்களில் இதுவரை முதலீடுகள் ஏதும் செய்யவில்லை. வங்கிகளில் சேமிக்கப்படும் நன்கொடைகளுக்கு அதையே வங்கிகளில் தற்போதுள்ள வட்டி விகிதத்தின் அடிப்படையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானம் முதலீடுகள் மற்றும் வைப்புத் தொகை குறித்தான வெள்ளை அறிக்கையினை கடந்த சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
English Summary
Tirupati Devasthanam invested Rs16 thousand crores