புகையிலை பொருட்கள் மீது எச்சரிக்கை புகைப்படம் மற்றும் வாசகங்களை மாற்றியமைக்க மத்திய சுகாதாரத் துறை உத்தரவு.! - Seithipunal
Seithipunal


குட்கா போன்ற புகையிலை பொருட்கள் மீது எச்சரிக்கை புகைப்படம் மற்றும் வாசகங்களை மாற்றியமைக்க மத்திய சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வரும் டிசம்பர் 1ஆம் தேதிக்குப்பின் நாட்டில் உற்பத்தி, இறக்குமதி அல்லது பொட்டலமிடப்படும் புகையிலைப் பொருட்கள் மீதான எச்சரிக்கை புகைப்படங்கள் மாதிறி அமைக்கப்படுகிறது.

மேலும், "புகையிலைப் பொருள்களால் வலிமிகுந்த மரணத்தைத் தழுவ நேரிடும்" என்பது போன்ற வாசகங்களை மாற்றியமைக்கவும் மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

டிசம்பர் 1ஆம் தேதி முதல் இது பயன்பாட்டுக்கு வரும். இந்த புதிய புகைப்படம் ஓராண்டு காலத்துக்கு நடைமுறையில் இருக்கும்.

வருகின்ற 2023-ம் ஆண்டு, டிசம்பர் 1-ம் தேதிக்குப் பின் உற்பத்தி, இறக்குமதி அல்லது பொட்டலமிடப்படும் புகையிலைப் பொருள்கள் மீது புதிய புகைப்படம் மற்றும் புகையிலையைப் பயன்படுத்துபவர்கள்,

"இளமையிலேயே மரணத்தைத் தழுவுகிறார்கள்" என்ற வாசகத்தையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறுபவர்கள், சட்டம், 2003ன் பிரிவு 20ன் படி சிறைத்தண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tobacco packs new image health warning


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->